மீனம் வார ராசிபலன் 
மீனம் - வார பலன்கள்

மீனம்- வார ராசிபலன் 21.6.2026 முதல் 27.6.2026 வரை

எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள்.

மீனம்

திருப்புமுனையான வாரம். ராசியில் உள்ள சனி பகவானை குரு பார்ப்பதால் நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். வியாபாரம் பெருகும். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். உத்தியோகம் அல்லது தொழிலில் மாற்றங்களை சந்திக்க நேரும். உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்வீர்கள். இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத்தரும். உங்கள் ராசிக்கு இது ஜென்மச் சனியின் காலம் என்பதால் புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சனி, செவ்வாயை பார்ப்பதால் வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். திருமணத்தடை அகலும். 24.6.2026 நள்ளிரவு 12.53 முதல் 26.6.2026 பகல் 12.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT