துலாம் - வார பலன்கள்

துலாம்- 2026 வார ராசிபலன் 16.8.2026 முதல் 22.8.2026 வரை

பல வருடமாக தடைபட்ட குல தெய்வ வழிபாட்டை தொடரும் சந்தர்ப்பம் அமையும்.

துலாம்

மனதில் தன்னம்பிக்கை தைரியம் குடிபுகும். ராசிக்கு 6ல் சனி வக்ரம் அடைவதால் நம்மால் சாதிக்க முடியும் என்ற மனநிலை உருவாகும். கடந்த கால சிந்தனைகளை விட எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அதிகமாகும். யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிர்காலத்தை மட்டுமே மனதில் கொண்டு பயணிப்பீர்கள். உங்களின் வாழ்நாள் கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறும். தொழில் ரீதியான சகல நன்மைகளும் தேடி வரும். கலைத்துறையினர் அழகு ஆடம்பரப் பொருள் விற்பனையாளர்கள் அதிக நற்பலன் பெறுவார்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் ஒப்படைப்பார்கள். தெய்வ பக்தி அதிகரிக்கும். பல வருடமாக தடைபட்ட குல தெய்வ வழிபாட்டை தொடரும் சந்தர்ப்பம் அமையும். இதுவரை தடைபட்ட சுப காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். திருமணத்தடை விலகும். கலைத்துறையினரின் திறமை மிளிரும். இதுவரை இருந்த நோய் தாக்கம் குறையதுவங்கும். ஆடி மாத நாக சதுர்த்தியன்று மல்லிகை மாலை அணிவித்து சர்ப்ப வழிபாடு செய்யவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT