துலாம்- வார ராசிபலன் 
துலாம் - வார பலன்கள்

துலாம்- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

துலாம்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்ற குருடன் இணைந்து ஆட்சி பலம் பெற்ற செவ்வாயின் 4ம் பார்வையை பெறுகிறார். புதிய முயற்சிகள்யாவும் வெற்றியடையும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும்.

உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வளம் சிறக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது பழமொழி. தொழில் உத்தியோகத்தில் சிந்தித்து செயல்படும் போது பெரிய பாதிப்புகள் வராது. திருமணத் தடை அகலும். வைத்தியத்தில் ஆரோக்கியத் தொல்லைகள் சீராகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். 13.6.2026 அன்று காலை 9.25க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பிரதோஷ நாளன்று மஞ்சள் அபிஷேகம் செய்து சிவனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406

SCROLL FOR NEXT