துலாம் - வார பலன்கள்

துலாம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை

சிலருக்கு புதிய தொழில் கிளைகள் துவங்கும் வாய்ப்புகள் உள்ளது.

துலாம்

எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தன் வீட்டை தானே பார்க்கிறார். அத்துடன் குரு பார்வையும் ராசிக்கு உள்ளதால் உழைக்காத அதிர்ஷ்ட வருமானம் உண்டு. தொட்டது துலங்கும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். புத்திசாலித்தனமாக பேசுவீர்கள். ஞாபக சக்தி கூடும். தொழிலுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சிலருக்கு புதிய தொழில் கிளைகள் துவங்கும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்த்த பதவி உயர்வால் உள்ளம் மகிழும். குல தெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவு செய்யும் வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி, ஒற்றுமை அதிகரிக்கும். 23.3.2026 அன்று அதிகாலை 4.14 முதல் 25.3.2026 அன்று காலை 6.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். விநாகயரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT