துலாம் - வார பலன்கள்

துலாம் - வார ராசிப்பலன் 31.5.2026 முதல் 6.6.2026 வரை

பொன், பொருள், புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9-ம் இடமான பாக்கியஸ்தானத்தில் பாக்கியாதிபதி புதனுடன் சஞ்சரிக்கிறார். சிறிய முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். நீண்டகால விருப்பங்களும் எண்ணங்களும் நிறைவேறும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். திருமணத் தடை அகலும். பொன், பொருள், புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உள்ளது.

புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம். பதவி உயர்வு, வருமான உயர்வு உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்து உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. வெள்ளிக்கிழமை மகாலட்சு மியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

SCROLL FOR NEXT