துலாம் - வார பலன்கள்

துலாம்- வார ராசிபலன் 9.8.2026 முதல் 15.8.2026 வரை

அடமானத்தில் உள்ள சொத்துக்கள் மீண்டு வரும்.

துலாம்

மனதில் நிம்மதி கூடும் வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை மன பாரம் குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். கவலைகள் கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாது. புதுப்பொலிவுடன் மங்களகரமாக இருப்பீர்கள். வாழ்வில் தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். அடமானத்தில் உள்ள சொத்துக்கள் மீண்டு வரும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு அவசியம். வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள். நோய் நொடி நீங்கும். சுப நிகழ்வுகள், ஆடம்பர விருந்துகள், ஆடம்பர உணவு விடுதிக்கு செல்லுதல் போன்ற பொழுபோக்கு இடங்களுக்கு சென்று உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து பித்ருக்களை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406