ஆதாயமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் நீச்ச பங்க ராஜயோகத்தில் இருக்கிறார். எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். பண வரவு அமோகமாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். இழந்த பதவி தேடி வரும். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயமான காலம். ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். காழ்புணர்ச்சியால் தவறான புரிதலால் பிரிந்த உடன் பிறப்பு உங்களை புரிந்து கொள்வார்கள். சஷ்டி விரதம் இருந்து பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.