துலாம் வார ராசிபலன் 
துலாம் - வார பலன்கள்

துலாம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் குருவுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரும் புள்ளிகளின் அறிமுகத்தால் நன்மைகள் கூடும். குடும்ப உறவுகளுடன் நல் உறவு நீடிக்கும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும். பாக்கிய பலன்களை அதிகரிக்க பௌர்ணமி அன்று பிரம்மாவை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406