துலாம் - வார பலன்கள்

துலாம்- 2026 வார ராசிபலன் 27.9.2026 முதல் 3.10.2026 வரை

வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும் வாரம். ராசியில் உள்ள புதன் சுக்கிரனுக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. சுமாரான வீட்டில் வசித்தவர்கள் நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. ஆரோக்கிய குறைபாடு அகலும். கூலித் தொழிலாளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து வேலை கிடை க்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். 30.9.2026 பகல் 1.13 மணி முதல் 2.10.2026 பகல் 3.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை ஒத்தி வைக்கவும். வேலைப் பளு அதிகமாகும். வீண் விரயங்கள் மிகுதியாகும். மகாளய பட்ச காலத்தில் வசதி இல்லாதவர்களின் திருமணச் செலவுக்கு உதவவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT