அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும் சாதகமான வாரம். ராசிக்கு 5ல் ராகு 11ல் கேது நிற்பதால் அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். தைரியம், தெம்பு பிறக்கும். பய உணர்வு நீங்கும். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டு வேலைக்குச் செல்ல நேரும். அரசு ஊழியர்களுக்கு நினைக்காத இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வயோதிகர்களுக்கு அரசின் சலுகைகள் உதவிகள் கிடைக்கும். திருமணத் தடை அகலும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. கடன்பட்டு புதிய வீடு கட்டும் பாக்கியம் உள்ளது. பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடம் மறையும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி ஆனந்தம் அடைவீர்கள். தொழில் சங்கடங்கள் நீங்கும். தடைபட்ட தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பணியில் இருப்பவர்களுக்கு மன நிறைவான போனஸ் கிடைக்கும். குல தெய்வ கடாட்சம், முன்னோர்களின் நல்லாசி கிட்டும். சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் நிலவிய குழப்பங்கள் தீரும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை நிலவும். ஆரோக்கிய தொல்லைகள் அகன்று வைத்திய செலவு குறையும். மகிழ்ச்சியை அதிகரிக்க காலபைரவருக்கு முந்திரி மாலை சாற்றி வழிபடவும்.