துலாம் - வார பலன்கள்

துலாம்- 2026 வார ராசிபலன் 20.9.2026 முதல் 26.9.2026 வரை

நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும்.

துலாம்

வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சிினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். தாய், தந்தையாகும் பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் குறையும். ஆரோக்கியமாக மன வலிமையுடன் செயல்படுவீர்கள். தந்தை யின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும். மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து மகாலட்சுமி வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT