துலாம் - வார பலன்கள்

துலாம்- 2026 வார ராசிபலன் 19.7.2026 முதல் 25.7.2026 வரை

திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.

துலாம்

நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம். ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்கிரன் கேது உடன் சேர்க்கை பெற்றுள்ளார். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் நடக்கும். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து சென்றால் மனகவலைகள் நீங்கி குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். தடைபட்ட மூத்த சகோதர, சகோதரியின் திருமணம் நடைபெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை லலிதா சஹஸ்ரநாமம் படிக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406