துலாம் 
துலாம் - வார பலன்கள்

துலாம்- 2026 வார ராசிபலன் 15.11.2026 முதல் 21.11.2026 வரை

அந்தஸ்து கெளரவத்திற்கு ஏற்ற ஆடம்பர வீடு கட்டுவீர்கள்.

துலாம்

நிதானம் தைரியம் குடிபுகும். ராசி அதிபதி சுக்ரன் நீச்சபங்க ராஜயோக நிலையில் சஞ்சரிக்கிறார். அனுபவ அறிவும் தன்னைத்தானே உணரும் சக்தியும் அதிகரிக்கும். குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிப்பீர்கள். மனத் தடுமாற்றம் நீங்கி விவேகத்துடன் கூடிய வேகம், நிதானம், தைரியம் மற்றும் தெம்பு உங்களுக்குள் குடிபுகும். அந்தஸ்து கெளரவத்திற்கு ஏற்ற ஆடம்பர வீடு கட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான சுகபோக ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள் உங்களின் நீண்ட நாள் லட்சியம் கனவு பலி தமாகும். ஒரு சிலருக்கு திருமண சீர் வரிசையாக இவை அனைத்தும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் சீரடையும். அதிக முதலீட்டில் தொழில் நடத்துபவர்கள் மிக கவனமாக இருந்தால் மட்டுமே உங்களை காத்துக் கொள்ள முடியும். நல்ல சகிப்பு தன்மையான வேலையாட்கள் கிடைப்பார்கள். தந்தை தந்தை வழி உறவுகளுடன் அனுசரித்து செல்ல வேண்டும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையால் சில இடர்கள் வரலாம். வெள்ளிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT