துலாம் - வார பலன்கள்

துலாம்- 2026 வார ராசிபலன் 13.9.2026 முதல் 19.9.2026 வரை

புகழ் மிக்கவர்களைக் கொண்டு முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள்.

துலாம்

சுப பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். குடும்பத்தில் இதுவரை தடைபட்ட சுப காரியங்கள் துரிதமாகும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். புகழ் மிக்கவர்களைக் கொண்டு முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். குழந்தை பேறு வாரிசு உண்டாகும். சத்ருக்கள் தொல்லை அகலும். கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை மகிழ்ச்சி தரும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். பணவரவு தாரளமாக இருந்தாலும், தேவையற்ற அலைச்சல்கள் விரயங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வெள்ளிக்கிழமை கோபூஜை செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT