துலாம் 
துலாம் - வார பலன்கள்

துலாம்- 2026 வார ராசிபலன் 29.11.2026 முதல் 5.12.2026 வரை

மாற்றுமுறை வைத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

துலாம்

நிறைவான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார்.கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.அமைதியான சூழல் நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் வாரம். கடல் தாண்டிச் செல்லும் யோகம் உள்ளது. எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.

தடைப்பட்ட திருமணம் கைகூடும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். திருமணமான இளம் வயது பெண்கள் கருவுறுவார்கள்.அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜயோக காலமாகும்.வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் செயல்படவும். மாற்றுமுறை வைத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும். எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT