சிம்மம் - வார பலன்கள்

சிம்மம்- 2026 வார ராசிபலன் 16.8.2026 முதல் 22.8.2026 வரை

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும்.

சிம்மம்

விருப்பங்கள் நிறைவேறும் வாரம். சிம்ம ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் ஏக யோகாதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார். இது பொற்காலம் என்று கூறும் வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த உங்களின் தாய் வழி சீதனம் உங்களை தேடி வரும். தொழில் சிறப்பாக நடக்கும். எந்தக் காரியத்தையும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். வருமானத்திற்கு மீறிய கடனை தவிர்க்கவும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான பிரச்சனைகள் ஓரளவு நல்ல முடிவிற்கு வரும். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். தீட்டிய திட்டங்களில் வெற்றி பெற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள். ஆடி மாதம் புனித நீர் நிலைகளில் நீராட சுய ஜாதக ரீதியான தோஷங்களும், சாபங்களும் விலகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406