சிம்மம்- வார ராசிபலன் 
சிம்மம் - வார பலன்கள்

சிம்மம்- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

வழக்குகள் சாதகமாக முடியும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நிறைவேறும்.

சிம்மம்

மேன்மையான வாரம்.ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சூரியனுக்கு சனியின் மூன்றாம் பார்வை உள்ளது.ஊர் மாற்றம்,வேலை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.பிள்ளைகளின் வெளிநாட்டுப் பயணம் உறுதியாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். காதல் சாதகமாகும். கண்ணில் உள்ள குறைபாட்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள்.

தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். அரசு உத்தியோக முயற்சியில் சாதகமான பலன் உண்டு.சகோதரர்களால் பயனடைவீர்கள். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை நிலவும்.

வழக்குகள் சாதகமாக முடியும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நிறைவேறும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. 9.6.2026 அன்று அதிகாலை 3.36 முதல் 11.6.2026 அன்று காலை 8.16 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் புரியாத கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.பிரதோஷ நாளில் சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிஷேகம் செய்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406