விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் கேது பகவான் சஞ்சரிக்கிறார். 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் குரு புதன் சூரியன் சேர்க்கை உள்ளது. அகலக்கால் வைக்காமல் நிதனமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் உண்டாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. வேலையில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். ரியல் எஸ்டேட், பங்குச் சந்தையில், கல்வி நிறுவனங்கள் துவங்குவது போன்றவற்றில் அதிக முதலீடு செய்வீர்கள். சிலர் வாரிசுகளை அரசியலில் நுழைக்க ஆர்வப்படலாம். ஆடி மாதத்தில் பெண் காவல் தெய்வங்களுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுவதால் குடும்பத்தில் நிம்மதி கூடும்.