சிம்மம் - வார பலன்கள்

சிம்மம்- 2026 வார ராசிபலன் 8.11.2026 முதல் 14.11.2026 வரை

காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.

சிம்மம்

அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். ராசியில் குரு கேது செவ்வாய் சஞ்சரிக்கிறார்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. அஷ்டமச் சனியின் பாதிப்பு குறையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு காலதாமதத் திருமணம் நல்லது. கணவரின் அன்பளிப்பான அசையாச் சொத்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு ஆலயத் திருப்பணிக்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். சஷ்டி விரதம் இருந்து பஞ்சகவ்யம் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT