சுபமான வாரம்.ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் அனைத்தும் ஈடேறும்.ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பயம் விலகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.திறமை மற்றும் புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள்.தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நட்பு, புரிதல் ஆழமாகும்.பிள்ளைகள் கல்வி,தொழில், உத்தியோகத்திற்காக இடம் பெயறுவார்கள். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும்.மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். கோர்ட், கேஸ் பிரச்சனையில் இழுபறியான நிலை நிலவும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். திருமணத் தடை நீடிக்கும்.பொறுமை பல வெற்றிகளை பெற்றுத் தரும். முக்கிய குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பௌர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.