எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசியில் சுக்கிரன் கேது சேர்க்கை உள்ளது. இதை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். இடம், பொருள், ஏவல் அறிந்து தன்மையாக பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பண வரவு உண்டாகலாம். இதுவரை கூட்டுத் தொழிலில் இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். சொத்துக்களின் மதிப்பு உயரும். குடும்ப உறவில் இருந்த மன கசப்பு நீங்கும். எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். திருமணத் தடை அகலும். அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நலம் சீராகும். சொத்துக்கள் மீதான டாக்குமெண்ட் பிரச்சினை தீரும். ஆடி மாத வெள்ளிக்கிழமை சிவ சக்தியை வழிபடவும்.