அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிகளை எடுப்பீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். சில்லறை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு தொழிலில் இயல்பு நிலை நீடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் சுமை குறையும். தன வரவில் தன் நிறைவு உண்டாகும். உபரி பணத்தை பூமி, வயல், பங்கு பத்திரங்களில் முதலீடு செய்வீர்கள். முக்கிய குடும்ப பிரச்சனையை மத்தியஸ்தர்களிடம் பேசும் போது கவனம் தேவை. பிள்ளைகளின் நலனில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் மனமார்ந்த பாராட்டுகள் கிடைக்கும். வாலிப வயதினருக்கு ஆண் குழந்தையும், சற்று வயதானவர்களுக்கு பேரன் பிறப்பான். மறுமணத்திற்கு நல்ல வரன் அமையும். பெண்களுக்கு கணவரின் புரிதல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும்.23.10.2026 அன்று பகல் 3.04 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சொத்து விசயத்தில் மருமகனால் மன சஞ்சலம் உருவாகும். தம்பதிகளுக்குள் ஈகோ தலை தூக்கும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். சிவனுக்கு பசும்பால் அபிசேகம் செய்து வழிபடவும்.