மனச்சங்கடங்கள் அகலும் வாரம். ராசியில் குரு, செவ்வாய், கேது சேர்க்கை உள்ளது. உங்கள் மீது பதிந்த வீண் சங்கடங்கள் அவமானங்கள் பழிச் சொற்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். நிலுவைச் சம்பளம் வரவும், வராக்கடன்கள் வசூலும் மனதை மகிழ்விக்கும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உங்களின் செயல்பாடுகள், எண்ணங்கள் சுத்தமாகும். பணம், செல்வாக்கு இருந்தாலும் ஆடம்பரத்தை விரும்பாதவராக மாறிவிடுவார்கள். புகழ், அங்கீகாரம், பணம், அந்தஸ்து கவுரவம் உயரும். சுப பலன்கள் மிகுதியாகும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சினை ஓரளவு குறையும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். பெற்றோர்களால் ஏற்பட்ட மன பாரம் குறையும். 19.11.2026 அன்று நள்ளிரவு 12.50 மணி முதல் 22.11.2026 அன்று அதிகாலை 5.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை வரலாம். சிவ வழிபாடு செய்வதால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.