சிம்மம் 
சிம்மம் - வார பலன்கள்

சிம்மம்- 2026 வார ராசிபலன் 29.11.2026 முதல் 5.12.2026 வரை

வெளிநாட்டில் வாழ்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். ராசியிலிருந்து கேது பகவான் வெளியேறி விட்டார். ராசியில் குரு செவ்வாய் சேர்க்கை உள்ளதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரம் பெருகும். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் அரசு வகை ஆதாயம் உண்டு. கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. சொத்து வாங்கும், விற்கும் முயற்சிகள் ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த மகள் மகனுக்கு வேலை கிடைத்து விடும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். இந்த காலகட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. உங்கள் நேர்மறை மனப் போக்கால் கெட்டவை நல்லதாக மாறும். மாமனார் மூலம் சகாயமான பலன்கள் உண்டு. மகிழ்ச்சியை அதிகரிக்க காலபைரவருக்கு முந்திரி மாலை சாற்றி வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT