நிர்வாக திறமை நிறைந்த சிம்ம ராசி நிறையினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் அயன, சயன விரய ஸ்தானத்திற்குள் கேது பகவானும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நடக்கப் போகும் இரண்டு குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு மிக சாதகமாகவே இருக்கப் போகிறது. குருவின் பார்வை பதியும் இடங்களும் உங்களின் கௌரவம் மற்றும் அந்தஸ்தை காக்கும் விதமாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசியில் நீசம் அடையும் சனி பகவான் மீண்டும் வக்கிரகதியில் மீன ராசிக்குள் வருவதால் அடுத்த ஒரு வருடத்திற்கு அஷ்டமச் சனியின் தாக்கம் இருக்கும். உரிய பரிகார வழிபாட்டு முறைகள் உங்களை காக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.உத்தியோகத்தில் இணக்கமற்ற சூழல் நிலவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வதால் உத்தியோக ரீதியான மன உளைச்சல் ஏற்படாது. இயன்ற வரை வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டு வேலை அரசு உத்தியோகம் முயற்சி வெற்றி தரும். புதிய கடன் வாங்கும் விஷயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும்.முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிர்த்தல் நல்லது.
சிம்ம ராசிக்கு 4,9ம் அதிபதியான செவ்வாயின் அவிட்ட நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் முறையற்ற சொத்துப் பங்கீடு நடந்தால் அநீதியான முறையில் சொத்து சேர்த்தாலும் அந்த சொத்தை அனுபவிக்க முடியாது. அவர்களுடைய வாரிசுகளுக்கும் சொத்து பயன்படாது. பல தலை முறைக்கு சொத்தை வைத்து உருட்டி வேடிக்கை பார்ப்பார்கள். முடிவில் சொத்து போன வழித்தடம் தெரியாது. ஆனால் பாவம் மட்டும் சரியான வழி கண்டுபிடித்து வந்து வாசல் கதவை தட்டும். மேலே கூறிய குற்றத்தின் வினைப் பதிவு யாருடைய ஜாதகத்தில் இருக்கிறதோ ? அவர்களுக்கே கோட்சார ராகுவால் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் மிகுதியாக இருக்கும். போன ஜென்மத்தை விட்டு விடுவோம். இந்த ஜென்மத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருந்தால் மறு பிறவி கிடையாது. அதனால் கடனால் துன்பப்படுபவர்கள் அறியாமல் நடந்த தவறுக்கு பிரபஞ்சத்திடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கும் போது ஆறாம் பாவகம் பலம் இழக்கும்.
சிம்ம ராசிக்கு விரயாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் சுப விரயங்கள் மிகுதியாகும்.விரயத்தை வீடு வாகனம் அல்லது பிள்ளைகளின் சுப விசேஷங்கள் என சுபமாக மாற்ற முயற்சி செய்வது நல்லது.உங்களின் ஆழ்மனதில் எண்ண அலைகள் அதிகரிக்கும். இதுவரை பங்குச் சந்தை , சூதாட்டம் போன்றவற்றைப் பற்றி யோசிக்காதவர்களுக்கு கூட அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபத்தை கொடுத்து ராகு உங்களை திணறடிப்பார். சிறிய மீனை போட்டு பெரிய மீனை வலையில் சிக்க வைப்பார். சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை கொடுத்து பெரிய முதலீட்டிற்கு உங்களை தயார்படுத்தி பெரிய இழப்பை சந்திக் செய்வார். பெரிய முதலீட்டை தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக கடல் கடந்து செல்லலாம் சிலரின் பிள்ளைகள் கல்லூரி உயர் படிப்பிற்காக வெளிநாடு செல்வார்கள்.
சிம்ம ராசிக்கு ராசி அதிபதி ஆன சூரியனின் சுயசாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம்.இது கிரகண தோஷ அமைப்பாகும்.ஆன்ம பலம் தன்னம்பிக்கை குறையும். பற்றற்ற நிலையில் வாழ்வீர்கள். சிந்தனைகள் செயல்பாடுகளில் மனத் தடுமாற்றம் இருக்கும்.வேலை அல்லது குடியிருப்பு மூலம் இடமாற்றம் வரலாம். ஒரு சிலர். படுக்கை அறையை மட்டும் மாற்றுவீர்கள்.பயணம் அதிகம் உண்டாகும். இதுவரை உங்களுக்கு சம்மந்தம் இல்லாத வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.அதனால் அடைந்த ஏற்பட்ட அவமானம் பயம் நீங்கும். விவகாரத்திற்காக சட்ட உதவிய நாடிய கணவன் மனைவிகள் நீதி மன்ற அறிவுரையை ஏற்று சேர்ந்து வாழ்வார்கள்.வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருப்பவர்கள் தாய்நாடு திரும்புவார்கள்.குடும்பத்தில் நிலவிய கடும் வேதனை,பசி, பட்டினி, அழுகை, தரித்திரம் குறையும். கடன் சுமை படிப்படியாக குறையும்.ஜாதகருக்கும் தாயாருக்கும் உடல் ஆரோக்கியம் கெடும்.
உங்களின் மனோநிலை வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். ஆறாமிட ராகு வேகத்துடன் செயல்பட்டு கர்மாவை மிகுதிப் படுத்தும் போது பனிரென்டாமிடத்தில் நிற்கும் கேது வீண் விரயத்தால் உணவு, தூக்கம், சுக போகம் போன்றவற்றை மட்டுப்படுத்தி நியாமற்ற ஆசை மற்றும் பேராசையை கட்டுப்படுத்துவார். ஒரு சிலரை குடும்பத்திலிருந்து பிரித்து வெளிநாட்டிற்கு சென்று வாழவைப் பார். என்னவென்றே தெரியாத நோய்க்கு வைத்தியம் செய்வார்கள்.சில பெரும் பணக்காரர்கள் கூட ஆடம்பரத்தை விடுத்து எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். வெகு சிலருக்கு இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மனைவி குழந்தைகள், நண்பர்களின் ஆதரவில் ஜீவனம் செய்ய நேரும். கேது கடகத்தை கடக்கும் முன்பு உங்களின் மேல் அக்கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டும்.
சிம்ம ராசிக்கு தன லாபாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தை நன் முறையில் வழி நடத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து பொறுமையாக செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடைபெறும்.முதலீடு இல்லாத தொழில்களை கமிஷன் அடிப்படையில் செய்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது. தொழிலை விரிவுபடுத்த நீங்கள் போட்ட திட்டத்திட்டத்தின் மூலம் திடீர் பண வரவும் உண்டு. எதிர்பாராத இழப்பும் உண்டு. இதனால் மனக்குழப்பமும் கலக்கமும் மிகும்.பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிறைய அலைச்சலும் குறைந்த வருமானமும் கிடைக்கும். கிடைத்த வாய்ப்யை பயன்படுத்த முடியாத வகையில் ஆரோக்கிய குறைபாடு இருக்கும். பலருக்கு தொழில் பின்னடைவும் இருக்கும் .
சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் உங்களின் தொழிலுக்கு துணையாக இருந்த பார்ட்னர்கள் விலகி மோசடித் திட்டங்களை தந்து சட்டச் சிக்கலில் மாட்ட வைக்கும் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். கூட்டுத் தொழில் பிரிவினையால் வங்கியில் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்த வங்கிகள் நெருக்கடி தருவார்கள். புதிய வங்கிக் கடன் கிடைப்பதில் ஆவணம் தொடர்பான பிரச்சனைகள் இழுத்தடிக்கும்.புதனின் காரகத்துவ தொழில்களான கணிதம், ஜோதிடம், அறிவு சார்ந்த ஆய்வாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தக ஆசிரியர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
சிம்ம ராசிக்கு 5,8ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் வளமான பலன்கள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். கௌரவம் அந்தஸ்து உயரும். தடை தாமதங்கள் விலகும்.அதிர்ஷ்டம் அரவணைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும்.பொருளா தார நிலை சிறப்பாக இருக்கும். முக்கிய குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்கள் மீதான முரண்பட்ட கருத்துக்கள் மாறும். தம்பதிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடு மறையும்.வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். பிள்ளைகளால் தேவையற்ற மனக்கசப்புகள் வரலாம்.
உங்களது காரியம் மிகச் சுலபமாக முடிய மகம் நட்சத்திரம் முழுமையாக இருக்கும் நாளன்று அதிகாலை சூரியனை வணங்கிவிட்டு முக்கிய பணிகளில் ஈடுபட்டால் காரியம் சித்தி அடையும். இயன்ற அளவு மாற்றுத் திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.