பராபவ வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், லாப ஸ்நானத்தில் லாபாதிபதி புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே லாபம் வருவதில் எந்த தடையும் இருக்காது. அதேநேரம் அஷ்ட மத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், வந்த தொகை மறுநொடியே செலவாகிவிடும். உடல் நலத்திற்காகவும் சிறு தொகையை செலவிடும் சூழல் ஏற்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய், மாதத் தொடக்கத்தில் தொழில் ஸ்தானத்திற்கு வரப்போகிறார். எனவே முடிக்கிடந்த தொழிலுக்கு நிறப்பு விழா நடத்தும் வாய்ப்பு உண்டு.
ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய் சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதி யான அவர், தொழில் ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். தொழில் வெற்றி நடைபோடும். வரவேண்டிய லாபம் வந்துசேரும். கூட்டுத்தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வது பற்றி சிந்திப்பர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் கடன் சுமை அதிகரிக்கக்கூடும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவைப்பீர்கள்.
கடக ராசியில் சஞ்சரிக்கும் சுகரன், ஆனி 21-ந் தேதி (5.7.2006) அன்று உங்கள் ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியில் அடியெடுத்து வைக்கும் வேளையில், எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பெண் வழிப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் வழியில் நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும்.
ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6.7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் ஒரு சில நன்மைகளும், சிய மனக்கசப்பான நிகழ்வுகளும் நடைபெறலாம். சனியின் மீது குருவின் பார்வை பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் வராது. இருப்பினும் உத்தியோக மாற்றமும், ஊர் மாற்றமும் வரலாம் உங்கள் ராசிக்கு 2 5, 10 ஆகிய இடங்களில் சனியின் பார்வை பதிகிறது. எனயே குடும்பத்தில் செலவுகள் கூடுதலாக இருக்கும். விருத்தினர் வருகை உண்டு, வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீகள், பிள்ளைகளின் கல்யாண முயற்சியும், வேலைவாய்ப்புக்காக படுத்த முயற்சியும் கைகூடும். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம். இலாகா மாற்றம் உறுதியா கலாம். உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும் சனிக்கிழமை விரதமும், வழிபாடும் சகஜ நிலையை உருவாக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள், மேலிடத்தில் ஒப்படைத்த பொறுப்புகளை கவனமாகச் செய்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் இணக்கமாக நடத்துகொள்வர். சுலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனை களை தவிர்ப்பது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்-
ஜூன்: 16, 17, 22, 23, 26, 27, 2 ஜூலை: 9, 10, 11, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.