மிதுனம் - வார பலன்கள்

மிதுனம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை

உங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் நல்ல படியாக முடிவுக்கு வரப்போகிறது.

மிதுனம்

வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசி அதிபதி புதனுக்கு குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. நடக்குமா? நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும். சிலர் அரசு வேலை கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வேலை தொழில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்தவர்களுக்கு நிலைமை சாதகமாக மாறும்.

உங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் நல்ல படியாக முடிவுக்கு வரப்போகிறது. நம்பிக்கை, நாணயத்தை நிலை நிறுத்துவீர்கள். தொழிலுக்கு அரசின் உதவி கிடைக்கும். உங்களின் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். குல இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும் இளம் பருவத்தினருக்கு திருமண காலம் நெருங்கி விட்டது. தம்பதிகளிடம் ஒற்றுமை மேலோங்கும். மகாவிஷ்ணு வழிபாடு மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406