புதிய அனுபவம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை ஜென்ம குருவாக பலனளித்த குரு பகவான் இனி தன குருவாக பலன் தரப் போகிறார். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இது இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டுக் தரக்கூடிய அமைப்பாகும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுபமங்கள காரியங்களால் தாராள மான பணச் செலவுகள் ஏற்படும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 4.6.2026 அன்று காலை 7.41 மணி முதல் 6.6.2026 அன்று இரவு 7.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய விசயங்கள் தாமதமாகும். ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனை களை கேட்டு ஏமாறாதீர்கள். துளசி மாலை அணிவித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.