மிதுனம் - வார பலன்கள்

மிதுனம்- 2026 வார ராசிபலன் 8.11.2026 முதல் 14.11.2026 வரை

பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும்.

மிதுனம்

திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடையும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டம் இப்பொழுது உங்களுக்கு வசப்படும். தொட்டது துலங்கும். உபரி வருமானத்தால் பொருளாதார நிலை உயரும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். சுப நிகழ்வுகளுக்கு தேவையான பணம் எதிர்பார்த்த இடத்தி லிருந்து கிடைக்கும். சொந்த வீட்டுக் கனவு நினைவாகும். பூர்வீகத்திற்கு சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. அழகு, ஆடம்பர பொருட்களை விற்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாக இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம், வளைகாப்பு, நல்ல உத்தியோகம், உயர் கல்வி போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும். ராகு கேது பெயர்ச்சி சுமாராக உள்ளதால் பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ற மாற்றம் உண்டாகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT