மிதுனம் வார ராசிபலன் 
மிதுனம் - வார பலன்கள்

மிதுனம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும்.

மிதுனம்

முழுமையான அனுகூலம் கிடைக்கும் வாரம். 3ம்அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் குண மேன்மை, செயல்திறன், தன் நம்பிக்கை கூடும். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோயால் இன்னல் அனுபவித்தவர்களுக்கு புத்தொளியும், உடல்பொலிவும் உண்டாகும்.தடைப்பட்ட பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும், பணியில் தேவையற்ற அலைச்சல்களால் விரயங்கள் ஏற்படலாம். திருமணம், குழந்தைப்பேறு வீடு, வாகனம் போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களுடன் நிலவிய பனிப்போர் விலகும். நாணயம் நீடிக்கும்.மாணவர்களுக்கு உயர் கல்வி யோகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். சிலர் அடுக்கு மாடி வீடு கட்டுவீர்கள்.1.7.2026 அன்று பகல் 1.31 முதல் 3.7.2026 அன்று நள்ளிரவு 12.48 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாமல் வேலைப்பளு இருக்கும்.காதல் விவகாரங்கள் உண்மையையும், மாயையையும் புரிய வைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை.பௌர்ணமி அன்று சத்திய நாராயணரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406