மிதுனம் - வார பலன்கள்

மிதுனம்- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

தொழில், வியாபாரத்தில் தடை, தாமதங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

உற்சாகமான வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனுடன் இணைவதால் புத ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தைரியம் ஏற்படும். ஆடம்பர சொகுசு வாழ்க்கையில் ஆர்வம் மிகுதியாகும். சொத்து சார்ந்த பிரச்சனைகள் சீராகும். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். மனக்கவலைகள் அகலும்.தொழில், வியாபாரத்தில் தடை, தாமதங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் நிம்மதி நிலைக்கும். இல்லத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் சீராகும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடக்க வாய்ப்புள்ளது. வளர்ச்சியும், லாபமும் பெருகி சேமிப்பு உயரும். வராத பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகனம், கல்விச் செலவு என சுப விரயமாக மாறும். வெளிநாட்டு, உத்தியோக, வேலை முயற்சியில் நல்லது நடக்கும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். பூர்வீகம் தொடர்பான முக்கிய செயல்களை தவிர்க்கவும். அரசாங்க உதவியும் மானியமும் உயரிய விருதும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பௌர்ணமி அன்று கருடருக்கு மஞ்சள் அபிசேகம் செய்து வழிபடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT