மிதுனம் - வார பலன்கள்

மிதுனம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும்.

மிதுனம்

எதிர்காலம் பற்றிய பயம் விலகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். மனதில் எண்ணிய திட்டங்களை செயல் படுத்த ஏற்ற நேரம். உங்கள் செயல்பாடுகள் மூலம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

குடும்பம்

கடனால் பாதித்த கவுரவம், மரியாதை குறைவு மறையும். சமாளிக்க முடியாமல் இருந்த பல பிரச்சினைகளுக்கு இனி சுலபமாக தீர்வுகாண முடியும். சில சுப விரயங்கள் உண்டு. மறைமுக பிரச்சினைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும். போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

திருமண வாழ்க்கை

மறுதிருமண முயற்சி சித்திக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் நடக்கும். புதிய வீடு கட்ட, வாகனம் வாங்க கடன் உதவி பெறலாம். தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் கூட்டாளிகளிடம் அனு சரித்து செல்லவும். வழக்குகள் ஒத்திப்போகும். திருமண வாழ்க்கையில் நிலவிய மனகவலைகள் நீங்கும்.வைகாசி விசாகத்தன்று மஞ்சள் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT