மிதுனம் - வார பலன்கள்

மிதுனம்- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும்.

மிதுனம்

சமுதாய அந்தஸ்து உயரும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சூரியன் மற்றும் கேது உடன் சேர்க்கை பெற்றுள்ளார். நாணயம் நம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கு புகழ் அந்தஸ்து கௌரவம் பற்றிய ஆர்வம் கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகமாகும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாகுவார்கள். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் நிலவிய சங்கடங்கள் அகன்று முன்னேற்றம் தோன்றும். 25.8.2026 அன்று அதிகாலை 3.06 முதல் 27.8.2026 அன்று பகல் 1.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவ்வப்போது பணப் பற்றாக்குறை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புதன்கிழமை கருட பகவானை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406