மிதுனம் - வார பலன்கள்

மிதுனம்- 2026 வார ராசிபலன் 18.10.2026 முதல் 24.10.2026

சிலர் கவுரவம் அல்லது பெருமையை நிலைநாட்ட வீண் செலவு செய்வார்கள்.

மிதுனம்

மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சூரியனுடன் சேர்க்கை பெற்று புத ஆதித்ய யோகமடைவது சிறப்பான கிரக அமைப்பாகும். இளைய சகோதர, சகோதரிகள் மேல் ஏற்பட்ட கோபம் வெறுப்பு தணியும். குழந்தைகளின் திறமைகளைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். வீடு, மனை வாங்க நன்கு அறிமுகமானவர்கள் மூலம் கடன் கிடைக்கும். காணாமல் போன பொருட்கள், தங்க நகைகள் கை மறதியாக வைத்த உயில், சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் கிடைக்கும். சிலர் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரும்.சிலர் கவுரவம் அல்லது பெருமையை நிலைநாட்ட வீண் செலவு செய்வார்கள். திருமணத் தடை அகலும். சிலர் காசி, கயா போன்ற ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வரலாம். குற்றம் குறை கண்டுபிடித்த மனைவி உங்களை புரிந்து கொள்வார். சிலருக்கு 18.10.2026 அன்று இரவு 7.33 முதல் 21.10.2026 அன்று காலை 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறர் சொல்வதைக் கேட்டு மனதை குழப்பாமல் இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் வெற்றி உண்டாகும். மகாவிஷ்ணுவிற்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT