எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி புதன் பல வருடமாக எதிர்பார்த்த ஒரு இடப்பெயர்ச்சி தந்து உங்களுக்கு மகிழ்ச்சியை தருவார். வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும். எதிர்காலம் பற்றிய நல்ல முடிவு கிடைக்கும். மனபலம், தைரியம் ஞாபக சக்தி தன் நம்பிக்கை அதிகரிக்கும். இலக்கை அடையும் முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். சமுதாய அந்தஸ்து உயரும். கவுரவப் பதவி கிடைக்கும். திருமண முயற்சி சித்திக்கும். புதிய சொத்துக்கள், உயர் ரக வாகனங்கள் சேரும். குடும்ப பெரியோர்களின் அன்பும் நல்லாசியும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். 15.11.2026 அன்று அதிகாலை 3.11 முதல் 17.11.2026 அன்று பகல் 3.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சிறு சிறு மன உளைச்சல் அசதி அலுப்பு இருக்கும். தினமும் அனுமார் வழிபாடு செய்வதால் இன்னல்கள் நீங்கும்.