காரியத்தடைகள் அகலும் வாரம். ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பஞ்சம ஸ்தானத்தில் சேர்க்கை பெற்றுள்ளார். பஞ்சங்கள் தீரும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு நிவர்த்தி கிடைக்கும். சேமிப்பு உயரும் குடும்பத்துடன் இன்பமாக மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பிரகாசமான எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள்.அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பாள். வியாபாரம் வெற்றி நடை போடும். தொழிலுக்கான கூடுதல் முதலீடைத் திரட்டுவீர்கள். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வளமான எதிர்காலத்திற்கு வழி பிறக்கும். மகிழ்ச்சிகரமான நல்ல சம்பவங்கள் நடக்கும். பிள்ளைகள் உறவில் ஏற்பட்ட விரிசல்கள் சீராகும். வருமானத்திற்கு ஏற்ற செலவும் ஏற்படும். உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத் தொல்லைகள் குறையும். மகாவிஷ்ணு கோவிலில் உழவாரப் பணிகள் செய்து வருவதால் கவலைகள் கஷ்டங்கள் அகலும்.