பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குரு தன ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்திருக்கிறார். எனவே இல்லத்தில் பல நல்ல சம்பவங்கள் நடைபெறும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சுபச்செய்திகள் வந்துசேரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வத்திலைாவர். அதன்விளைவாக வியாபாரம் விருத்தி அடையும் வீரயச் செவ்வாயின் ஆதிக்கத்தால் சொத்துக்கள் விற்பனையும் புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பும் உண்டு.
ஆடி 15-ந் தேதி (31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியளோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைவதால் எதிர்பாராத புதிய திருப்பங்கள் ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும் குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியம் நடைபெறும் தொழிலில் புதிய யுத்திகளைக் கையாள்ர்கள் அதன் விளைவாக கடன் சுமை குறையும் நீண்டதூரப் பயணங்களால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்குவர். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, வெளிநாடு சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி கைகூடும்.
ஆடி 16-ந் தேதி (1.8.2026) அன்று உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசிக்குள் அடியெடுத்து வைப்பதால் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். இதுவரை தாமதப்பட்டு வந்த பதவி உயர்வு தானாக வந்துசேரும் வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம் வியாபாரம் வெற்றி நடைபோடும். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று நினைத்தவர்களுக்கு கொடுக்கல்வாங்கல் சீராகும் நேரம் இது முன்னோர்களால் கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்து கிடக்கும் கோவில்களை பராமரிக்கும் முயற்சி கைகூடும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தொழிலில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
ஆடி 13-ந் தேதி 12.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுகரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சுக்ரன் பூரவ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல புதிய முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது, பூமி சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கும் பாசுப்பிரிவினை செய்துகொள்வது மேலும் தாமதப்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் மாற்றத்தால் வேகளை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு வீண்பழி ஏற்படும். பிறரிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும் வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டு கலைஞர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவ-மாணவிகள், கல்வியில் அக்கறை செலுத்துவர, பெண்களுக்கு இல்லத்தில் நல்ல எம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில நிறைவு ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்-
ஜூலை: 19, 20, ஆகஸ்டு: 1, 2, 5, 6, 11, 12, 13, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம் ஆரஞ்சு