ராசிபலன்

தனுசு- 2026 சித்திரை மாத ராசிபலன்

ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

குரு கடாட்சம் நிறைந்த தனுசு ராசியினரே!

தனுசு ராசிக்கு பாக்கிய ஸ்தான அதிபதியான சூரியன் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பூர்வ புண்ணி ஸ்தானம் பாக்கிய ஸ்தானம் இரண்டும் வலிமை பெறுகிறது. திட்டங்கள் பலிதமாகாமல் நினைப்பது ஒன்று நடப்பது வேறு மாக ஏமாற்றத்தை சந்தித்த நிலை மாறும். முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள்.

மனம் பற்றற்ற நிலையை விரும்பும். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். சிலருக்கு கலப்பு திருமணம் நடக்கும்.

சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்கு எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் பலிதமாகும். தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தாய் மாமன் ஆதரவால் தீரும். வேலைப் பளுவினால்நேரத்திற்கு சாப்பிட முடியாது.

சமுதாயத்தில், உற்றார், உறவினர்களிடம் நல்ல வரவேற்பு, உதவிகள் கிடைக்கும்.விலகிச் சென்ற உறவுகள் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும்.

தாயின் நல்லாசியும் ஆஸ்தியும் கிடைக்கும். இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு , வேலை வாய்ப்புகள் கிட்டும்.

கடினமாக உழைப்பும் முயற்சியும் இருந்தால் இலக்கை, லட்சியத்தை அடைய முடியும். தாராள தன வரவால் குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பு கூடும்.திருணப் பேச்சு வார்தைகள் நல்ல முடிவிற்கு வரும்.சிலருக்கு விருப்ப விவாகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வந்து சேரும்.மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்தை குறைத்து

கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கெட்ட சகவாசங்களை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். நீண்ட கால நோய்களுக்கான சிகிச்சை நல்ல பலன் தரும்.

பொருளாதாரம்:

அதிர்ஷ்டம் பற்றி கூறும் ஐந்தாமிடத்தில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் மிகுதியான பொருளாசை உண்டாகும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும்.பொன், பொருள் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். பல வருடமாக விற்காமல் கிடந்த சொத்து விற்பனையில் பெரிய பணம் கிடைக்கலாம்.

முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்ட ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தொழிலால் வருமானம் பெருகும். வாழ்க்கைத் தரம் உயரும்.

பெண்கள்:

வெளிநாட்டு வருமானம் வரும் அல்லது வேற்று இனத்தவரின் உதவிகள் கிடைக்கும். தன வரவில் தடையில்லாத, தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும்.நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் இந்த மாதத்தில் கிடைத்துவிடும். வராக்கடன்கள் வசூலாகும்.

தங்க நகைகள், சொத்துக்களை அடமானம் வைத்து பிழைப்பு நடத்திய நிலை முற்றிலும் மாறும்.நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். தாய் வழி உறவுகளால் அதிக நன்மையும், ஆதாயமும் உண்டாகும். மகளிர் சுய உதவிக் குழு, மாதர் சங்கம் போன்ற முக்கியமான அமைப்புகளில் உயர் பதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தகவல் தொடர்பு சாதனங்களை முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.

உத்தியோகஸ்தர்கள்:

பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடலாம். சிலர் முதலாளியின் அன்பைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க நேரும்.

உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இணக்கமற்ற சூழல் மாறும். 5ல் சூரியன் நிற்பதால் அரசு அதிகாரிகள் லஞ்ச விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலையை மாற்றலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.

சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்க்கும் வேலையை நழுவ விடுவார்கள். புதிய வேலைக்கான பணி நியமன உத்தரவை வாங்கிய பிறகே பழைய வேலையை விட வேண்டும்.

முதலீட்டாளர்கள்:

வியாபாரிகள், முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறும் நல்ல நேரம். சிறுதொழில், சில்லறை வணிகர்கள் மொத்த வியாபாரிகளாக தொழிலை உயர்த்துவீர்கள். சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை, தொழில் முன்னேற்றம் போன்ற அனைத்தும் மனதிற்கு முழு நிறைவு அளிக்கும்.

நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும்.

அரசியல்வாதிகள்:

5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் தனுசு ராசி அரசியல் பிரமுகர்கள் வைத்ததுதான் சட்டம். உங்களைச் சுற்றி எப்பொழுது தொண்டர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதால் மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவீர்கள். மாதத்தின் முற்பகுதியில் சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள். அதிக அலைச்சல் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிக மாக இருக்கும். குரு அஷ்டம ஸ்தானத்தை நெருங்குவதால் எதிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கவனமாக செயல்பட வேண்டிய காலம்:

சனி+செவ்வாய் சேர்க்கை தனுசு ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் 2,3ம் அதிபதி சனியும் 5,12ம் அதிபதி செவ்வாயும் சேர்க்கை பெறுகிறார்கள்.குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி அதிகமாக சம்பாதிப்பீர்கள்.

பணத்தின் சுவையை அனுபவிக்கும் முன்பு சட்ட சிக்கல் வரலாம். ஒரு சிலருக்கு திடீர் பக்தி அல்லது பதவி ஆசை வரலாம். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகள் ஏற்படலாம். நல்லது கெட்டதை பகுத்தாயும் தன்மை மற்றும் நிதானம் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சிலருக்கு நடக்கும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். பிறரின் நலத்திற்காக செய்த செயல் கூட உங்களை பதம் பார்க்கும். மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவுகள் அதிகமாகும்.

பரிகாரம்:

சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.

வியாழக்கிழமை லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடுவதால் பொருளாதார மேன்மை கூடும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406