ராசிபலன்

விருச்சிகம்- 2026 சித்திரை மாத ராசிபலன்

உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும்.

வீரம் மிகுந்த விருச்சக ராசியினரே!

விருச்சிக ராசிக்கு ராசி அதிபதி மற்றும் ஆறாம் அதிபதியான செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சனியுடன் சேர்க்கை பெறுகிறார். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுத் தரப் போகிறார். தொட்டது துலங்கும். எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகிறது. தடைபட்ட அனைத்து செயல்களும் சித்தியாகப் போகிறது.

பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லப் போகிறது. இது வரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்களின் பெயர் புகழ் பரவும். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.

உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும்.ஆன்ம பலம் பெருகும். சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். இதனால் மகிழ்ச்சி கடலில் நீந்தப் போகிறீர்கள்.

ஒளிமயமான எதிர்காலம் உங்களை வழிநடத்தப் போகிறது. எதிர்காலம் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும் பலிதமாகும்.கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றி பெறுவீர்கள். திறமைகளை வெளிக்காட்ட அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது. கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும்.

மனக்கசப்பில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும். குடும்ப உறுப்பினர்களிடம் சகஜ நிலை திரும்பும். உங்கள் குடும்ப நிலை உயரும். சிலருக்கு குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். குடும்ப உறவுகள் உங்கள் மேல் அன்பை பொழிவார்கள்.

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியப் பேச்சுக்கள் கைகூடும். குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாது. பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமூகமாக தீர்க்கப்படும்.சிலர் தாத்தா, பாட்டியாகுவார்கள். பெண்கள் கருத்தரிப்பார்கள்.

உடல் பெருக்கம் ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும். பெற்றவர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும்.மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொருளாதாரம்:

தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சனி மற்றும் குருவின் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் இணைந்து ராஜ யோகத்தை தரும். நல்ல வசதி வாய்ப்புகள் உருவாகும். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள்.

இதுவரை பங்கு சந்தை பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட பங்கு வர்த்தகத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் உருவாகும்.சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வீடு வாகனத்தை வாங்குவார்கள்.

பெண்கள்:

பெண்களுக்கு குடும்ப சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு சிறப்பாக இருக்கும். அழகிய, ஆடம்பர விலையுயர்ந்த வெளிநாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும்.

உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடு கள் மறையும். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள்.உங்களின் மேல் அக்கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும். சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டிய காலமாகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும்.

உத்தியோகஸ்தர்கள்:

மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகளால் பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.அரசாங்க உத்தியோகம் அல்லது அதற்கு இணையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டால் உழைப்பிற்கு மேல் இரண்டு மடங்கு வருமானம் உயரும்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். அதன் முலம் நல்ல வருவாயும் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். சம்பள உயர்வு கிடைக்கும். உபரி,தனி வருமானம்’ மகிழ்ச்சியைத் தரும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு காரிய சித்தி உண்டு. தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும்.

முதலீட்டாளர்கள்:

தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதி மந்திரியாக திகழ்வீர்கள்.இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம்.

பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பானவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். புதிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்.தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். எதிர்பாராத தன லாபம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல்,வாங்கல் தொடர்பான விசயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அரசியல்வாதிகள்:

6ல் உச்ச சூரியன் நிற்பதால் அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து எதிரியை விரட்டுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள். நினைத்த சாதிக்க கூடிய பணபலம், படை பலம் பெருகும். புதனுடன் பரிவர்த்தனை பெற்ற ஐந்தாம் அதிபதி குருபகவான் பதவிக்கு, கவுரவத்திற்கு கவசமாக இருப்பார். தேர்தலில் செலவழித்த தொகை வீண் போகாது. கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவு பல மடங்காக அதிகரிக்கும்.

கவனமாக செயல்பட வேண்டிய காலம்:

சனி செவ்வாய் சேர்க்கை விருச்சிக ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 3,4ம் அதிபதியான சனி பகவானும் 1,6ம் அதிபதியான செவ்வாயும் சேர்க்கை பெறுகிறார்கள்.சிலர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தனிமையில் ஓய்வு எடுப்பார்கள். சிலர் பணியிலிருந்து ஓய்வு பெறலாம். பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள்.

சிலர் குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம். சிலர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் பக்தி மார்க்க இயக்கத்தில் சேரலாம். சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லலாம். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரையச் செலவு அதிகமாகும். இடது கண்ணில் சிறு உபாதைகள் தோன்றி மறையும் அல்லது அறுவை சிகிச்சை செய்ய நேரும்.பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்கவும். சிலர் வேற்று மதத்திற்கு மாறி விடுவார்கள். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

பரிகாரம்

சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து அந்தணர்களுக்கு தான தர்மம் வழங்க நிம்மதி கூடும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட வழிபட கடன் தொல்லை கட்டுப்படும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406