ராசிபலன்

கன்னி- 2026 சித்திரை மாத ராசிபலன்

அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும்.

புத்தி சாதுரியம் நிறைந்த கன்னி ராசியினரே!

பிறக்கப் போகும் சித்திரை மாதத்தில் உங்களின் ராசி அதிபதி புதன் குரு பகவானுடன் பரிவர்த்தனை பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். புத பகவானின் ஆசி பெற்ற கன்னி ராசியினர் இந்த தமிழ் மாதம் அதிர்ஷ்டத்துடன் வாழப் போகிறீர்கள்.குருவின் பார்வை கவசமாக காக்கும் என்பதால் தைரியமாக, தெம்பாக இருக்கலாம்.

குல தெய்வ அனுகிரகம் மற்றும் முன்னோர்களில் நல் ஆசிகள் உள்ளது. எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். ஆன்ம பலம் பெருகும்.

உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.

குடும்ப உறவுகளின் ஒற்றுமையை நிர்ணயிப்பதில் பணமும், சொத்தும் முக்கிய காரணியாக உள்ளது. பணம் குவியும் காலத்தில் உறவுகள் ரத்தின கம்பளம் விரிக்கும். சில நேரத்தில் ஏளனப்படுத்தும். ராசியில் கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போன்ற உணர்வு உண்டாகும்.

யாரையும் பார்க்கவோ, பேசவோ பிடிக்காது. சிலர் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வெளியூர் என வாழ நேரலாம். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம்.

குரு தசை, புத்தி நடப்பவர்களுக்கு குரு பலத்தால் பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் விமரிசையாக நடக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சம்பந்தமில்லாத குற்றத்தில் உங்களை மாட்டி வம்பு வழக்கை உருவாக்குவார்.

இழுபறியாக இருந்துவந்த குடும்ப சொத்து விவகாரம் சட்டத்தின் உதவியை நாடவைக்கும். தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும். மாணவர்களுக்கு படிக்கும் பாடம் நன்றாக புரியும். இது வரை சுமாராக படித்தவர்கள் கூட நன்றாக படிக்க துவங்குவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.

பொருளாதாரம்

குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிப்பீர்கள். விட்டதை பிடிக்கிறேன் என அதிர்ஷ்டத்தை துரத்துவீர்கள். சிலருக்கு சுப பலன்களும் நடக்கும்.அதிர்ஷ்ட வசமாக வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம், கல்வி என சுப செலவுகள் ஏற்படலாம்.

விரய கேதுவினால் பெரிய சேமிப்போ லாபமோ எதிர்பார்க்க முடியாது. சிலர்வ ட்டிக்கு வட்டி கட்ட நேரும். ரேஸ், சூதாட்டம், லாட்டரி போன்றவை மீளமுடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும். சிலருக்கு பய உணர்வினால் நேரம், காலம், பொருள் விரயம் உண்டாகும். தன ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் பெரிய நஷ்டமோ, மிகுதியான அசுபமோ இருக்காது.

பெண்கள்:

குடும்பத்தில் உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும். ஒவ்வாமை ஏற்படும் என்பதால் வெளி உணவினை சாப்பிடாமல் வீட்டில் சமைத்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.தேவையற்ற பேச்சை குறைத்தாலே எந்த பாதிப்பும் வராது.

அறிமுகம் இல்லாத பழக்கம் இல்லாத நபர்களிடம் குடும்ப விபரங்களை பகிரக் கூடாது. விலையுயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க கூடாது. வாங்க கூடாது. உடன் பிறந்த மூத்த சகோதர, சகோதரிகளிடம் மனக்கசப்பு உண்டாகும். பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்.வண்டி வாகனங்களை இயக்கும் போது கவனமாக செயல்படவும்.காஞ்சி காமாட்சியை வழிபட தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

உத்தியோகஸ்தர்கள்;

அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடக்கும். ஆனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் நற்பெயரும், அங்கீகாரமும் கிடைக்காது. சிலர் சொற்ப சம்பளத்திற்காக குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில் வாழ நேரும்.

சிலர் வேலையை ராஜினாமா செய்ய நினைத்தால் கூட முடியாத வகையில் சூழ்நிலை அமையும். வேலையில் மற்றவர்களை குறை கூற வேண்டாம்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் இன்னல்களை கட்டுப்படுத்த முடியும்.சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும்.

முதலீட்டாளர்கள்:

சுய தொழில் புரிவர்களுக்கு தொழில் நடக்கும். தொழில் நடத்த தேவையான பொருளாதாரத்தை எப்படியாது திரட்டுவீர்கள். கூட்டம் கலை கட்டும். ஆனால் கல்லாவில் காசு இருக்காது. சிலர் பணத்தை இரட்டிப்பாக்குவது போன்ற செயல்களில் முதலீடு செய்து அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது.

தொழில் கூட்டாளிகளால் வம்பு வழக்கு வரலாம். அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் மிகுதியாக இருக்கும்.

கவனமாக செயல்பட வேண்டிய காலம்:

சனி செவ்வாய் சேர்க்கை.. ராசிக்கு ஏழாம் இடமான சம சப்தம ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. 5, 6ம் அதிபதி சனியும் 3,8ம் அதிபதி செவ்வாயும் சேர்க்கை பெறுவதால் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு இருக்கவே செய்யும். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும்.

சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடக் கூடிய நோய்களின் வீரியத்தை அதிகப்படுத்தி உடல் தளர்ச்சியையும் மனபயத்தையும் மிகைப்படுத்துவார். அவ்வப்போது உடல் களைப்பால் அவதி அசவுகரியங்கள் ஏற்படும்.

சிலருக்கு கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். சிலருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வம்பு, வழக்கு வரலாம். சுய சிந்தனை மட்டுப்படும். வந்த வாக்கிலும் போன வாக்கிலும் வாழ்க்கையை வாழ்வார்கள்.வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பு வராது.

பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். சிலர் மதம் மாறலாம் அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். உயர்கல்வி முயற்சி தடை, தாமதத்திற்குப் பிறகு பலிதமாகும். தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம்.

பரிகாரம்:

சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து குலதெய்வத்தை வழிபட பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பிரதோச காலத்தில் பச்சரிசி மாவில் நந்திக்கு தீபம் ஏற்றி வழிபட கர்ம வினை தீரும். மன சஞ்சலம் நீங்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406