கடமை உணர்வு நிறைந்த கடக ராசியினரே!
பிறக்கப் போகும் சித்திரை மாதத்தில் தன ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.
தொழிலால் தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும்.மனக் குழப்பம் நீங்கி தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள் மொத்தத்தில் ஆரவாரம் நிறைந்த சித்திரை மாதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நினைவாற்றல் மேம்படும். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக் கொள்வீர்கள். எதையும் வரும் முன் அறிந்து செயல்படுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். தேவையான நிதி உதவிகளை வங்கியில் இருந்து பெறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சில மாதங்களில் நிகழப் போகும் குருப் பெயர்ச்சியால் நல்ல மாற்றங்கள் இப்பொழுதே தெரியத் துவங்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் அன்பில் ஆனந்தம் அடைவீர்கள். பிரிந்த குடும்ப உறவுகளின் வருகை ஆறுதலையும் நிம்மதியையும் தரும்.
விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். விவகாரத்து வழக்கு சாதகமாகும்.தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.தொழில் அலைச்சலால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாது.வைத்தியத்தில் உடல் உபாதைகள் எளிதில் கட்டுப்படும்.
வழக்குகளில் சாதகமான தீர்ப்பும் கிடைக்கும்.பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும்.பல வருடங்களாக திருமணத் தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும்.
சிலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும்.மாணவ , மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம்.
பொருளாதாரம்
4ம்மிடமான சுக ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். எதிர்பாராத தனவரவு மாற்றம் மன மகிழ்வை தரும்.
கடன் பிரச்சனையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய சிக்கல்கள் தீரும். பணப் பற்றாக்குறைகள் அகலும். வங்கியில் உபரித் தொகை சேமிப்புத் தொகை உயரும். கரைந்த சேமிப்புகள் வளரும். அடமான நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். கடன் பெற்றாவது சொந்த வீடு வாகன யோகத்தை அடைவீர்கள்.
பெண்கள்
பெண்களுக்கு இந்த தமிழ் மாத பிறப்பு மகிழ்ச்சியை மிகைப்படுத்தி தரும்.குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாக்கு வன்மை பெறும். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள்.
குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரை யும் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைப்பேறு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.ஆரோக்கியம் சீராகும்.கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். உற்றார் உறவினர்களுடன் நிலவிய மன பேதங்கள் மறையும்.
தாய் வழிச் சொத்து கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வீட்டுக் கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அதிர்ஷ்டம், தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும்.கடன் சுமை குறையும். அனைத்து வகையிலும் திருப்புமுனையான மாதமாக அமையும்.
உத்தியோகஸ்தர்கள்
எதையும் தைரியமாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.உங்களது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். மன திருப்தி கிடைக்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். நம்பியவர்களே துரோகம் செய்யலாம் என்பதால் அலுவலக நண்பர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும்.
முதலீட்டாளர்கள்
சுயதொழில் அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 10ல் சூரியன் இருப்பதால் நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தி தொழிலை வளர்க்க விரும்புவார்கள். சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நல்ல நேரம். உற்பத்தி, கொள்முதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.இசைக் கலைஞர்கள், சினிமா பத்ரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசனகர்த்தாக்கள் ஆகியோர்களுக்கு விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகள்
விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதம். எதிர் கட்சியினருக்கு சாதகமான காலம். ராகு கேதுவின் சஞ்சாரம் சற்று சுமாராக இருப்பதால் அரசியல் வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அனைவருக்கும் ஏற்புடைய கருத்தை பேச வேண்டும். செயலில் விவேகம் மற்றும் நிதானத்தை கடைபிடிக்கவும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சனி 5,10ம் அதிபதியான செவ்வாயுடன் சேர்க்கை பெறுகிறார். தொழில் தொர்பான அனைத்து விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.எந்த ஒரு நிலையிலும் அவசரம் வேண்டாம்.
சிலர் மனக்குழப்பத்தால் முக்கிய பணியை திருப்திகரமாக செய்ய இயலாது.மனதின் வேகத்திற்கு ஏற்றவாறு செயல்களில் வேகம் இருக்காது.தேவையற்ற யோசனை களால் கவலைகள் அதிகமாகும்.உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்க நேரலாம்.குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம்.
அதிக மதிப்பு உள்ள சொத்தை குறைந்த விலைக்கு விற்கலாம்.அசையாச் சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது. சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவார்கள். கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் அதிகரிக்கும். விளை நிலங்கள் தொடர்பான பங்காளி சண்டை பேச்சுவார்த்தை மூலமாக சரியாகும். பண்ணைத் தொழில் நடத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.உடன் பிறந்தவர்களின் அன்பு அனுசரனையும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றி தீர்மானிப்பதில் குழப்பம் அதிகரிக்கும். சிலருக்கு புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை மாற்றம் கிடைக்கும். சிலரின் தந்தை தொழிலுக்காக தூர தேசம் செல்லலாம்.
பரிகாரம்
சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபடவும்.
திங்கட்கிழமை சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்..
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406