ராசிபலன்

ரிஷபம்- 2026 சித்திரை மாத ராசிபலன்

வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும்.

ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் மிகுந்த ரிஷப ராசியினரே!

உங்களின் ராசி அதிபதி சுக்ரன் சித்திரை 5 வரை மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார்.நினைப்பதை சாதிப்பீர்கள்.

வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும். சேவை மனப்பான்மை மிகும். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும்.

சிலர் மதம் மாறுவார்கள். உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும்.உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும்.பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். கடந்த சில நாட்களாக அனுபவித்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். வாடகை வீட்டு தொல்லை அகலும். இதுவரை விற்காமல் கிடந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும்.

பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும்.

திருமண முயற்சிகள் பலிதமாகும். நல்ல வரன் கிடைக்கும். எந்த தடையும் இன்றி பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் நடைபெறும் நாள்பட்ட வியாதிகள் மறையும்.

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.பயண அலைச்சலால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும்.கை, கால் மூட்டு வலி குறையும்.சில மாணவர்கள் உயர் கல்விக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அல்லது விடுதியில் தங்கி படிப்பார்கள்.

பொருளாதாரம்:

தொட்டது துலங்கும். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். தன ஸ்தான குருவால் பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். சென்ற மாதத்தை விட இந்த மாதம் உபரி வருமானம் கிடைக்கும்.

அரசின் மானியம் மற்றும் உதவி கிடைக்கும். விலை போகாது என்று முடிவு செய்த சரக்குகள் கூட விற்று பணம் வரும். கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள்.

பெண்கள்:

எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். . சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். பெண் தொழில் முனைவோர்களுக்கு மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும்.

பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் கல்வி ஆர்வம் , முன்னேற்றம் மன நிம்மதி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

வேலை இல்லாதவர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும்.

முதலீட்டாளர்கள்:

சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விறுவிறுப்பு அடையும். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும். தொழில் சிறப்பாக இருந்தாலும் ராசி அதிபதி சுக்கிரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது.

சிலருக்கு அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உதயமாகும். ராசி அதிபதி விரய ஸ்தானத்தை கடக்கும் வரை முதலீட்டாளர்கள் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு பெரிய பட்ஜெட் தொழிலில் ஈடுபட வேண்டும்.

அரசியல்வாதிகள்:

எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை அடக்க முடியும் என்பதால் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உண்டு. பொது மக்களின் ஆதரவு, நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் உண்டு. நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் தன்னலமற்ற சேவை செய்வீர்கள்.

கட்சிக்காகவும், பொது மக்களுக்காவும் மிகுதியான பொருள் விரயத்தை சந்திப்பீர்கள் சிலர் முழு நேர அரசியல்வாதியாக மாறி மக்களுக்கு சேவை செய்வார்கள். கவனமாக செயல்பட வேண்டிய காலம் சனி + செவ்வாய் சேர்க்கை: ராசிக்கு 11ம் மிடமான லாப ஸ்தானத்தில் 7, 12ம் அதிபதி செவ்வாயும், 9,10ம் அதிபதி சனியும் சேர்க்கை பெறுகிறார்கள்.

இந்த சேர்க்கை உள்ளதால் சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மருத்துவ செலவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள்.

சேமிப்புகள் கரையும்.வெளியூர், வெளிநாட்டு பயணத்தில் தடை, தாமதம் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளுடன் மனகசப்பு உண்டாகும். தந்தை குடும்பத்தை பிரிந்து தூர தேசம் செல்லலாம்.சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோ பிரிந்து வாழலாம்.

தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பிரியும் நிலை ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்க வேண்டும். விரயங்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்:

சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும் வெள்ளிக்கிழமை மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406