ராசிபலன்

மீனம்- 2026 சித்திரை மாத ராசிபலன்

உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும்.

சிந்தித்து செயல்படும் மீன ராசியினரே

ராசி அதிபதி குரு பகவான் கேந்திரத்தில் நின்று கேந்திராதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுவது மிகச் சிறந்த யோகமான அமைப்பாகும். தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும் . பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும்.

உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும். உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். கடந்த கால இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாதம்.

உங்கள் தகுதியை, திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடிய நல்ல சந்தர்பங்கள் கூடி வரும். பல்வேறு வெற்றிகளைக் குவிக்கும் யோகமுண்டாகும். முயற்சிகள் வெற்றி தரும். பணவசதி சிறப்பாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய், தந்தை பக்கபலமாக இருப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை மனநிறைவு தரும். உற்றார் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும். திருமண வயதில் உள்ள மகள், மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்துவார்கள். லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். வீடு வாகன யோகம் உண்டாகும். 2ம்மிடமான தனம், வாக்கு ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி சூரியனும் எட்டாம் அதிபதி சுக்கிரனும் நிற்பதால் குடும்ப பிரச்சனையில் சம்பந்தமில்லாத நபர்கள் தலையிட்டு உங்களை மனசஞ்சலப்படுத்தலாம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தினால் நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும் யோகா, தியானம் போன்ற வற்றில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். படிக்கும் பாடம் நன்கு புரியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். பேச்சுப் போட்டி, பட்டிமன்றங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் ஜென்ம சனியின் காலம் என்றாலும் ஜனன கால தசாபுத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு வீடு கட்டும் பணி துரிதமடையும். குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் நடக்கும்.

பொருளாதாரம்

தனம், வாக்கு குடும்பஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. சுக்கிரன் மீன லக்னத்திற்கு அஷ்டமாதிபதி என்பதால் திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நேரம். லாபம் வீடு தேடி வந்து கதவை தட்டும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். மனைவிக்கு தாய் வழி சொத்து கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தொழில், பதவி ரூபத்தில் வந்து கதவைத் தட்டும். புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும்.

பெண்கள்

பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை நீடிக்கும். வீட்டுப் பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ நேரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் காலம்.

உத்தியோகஸ்தர்கள்

உங்களின் உழைப்பு பணமாக காய்க்கும் நேரம். நேர்மையான வழியில் உழைப்பவர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும்.ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளால் முதலாளிகளால் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும்.

அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் மேல் வீண் பழி சுமத்தப்படலாம். அவப் பெயர் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சிலர் வேலைப் பளுவால் பார்க்கும் வேலையை விட்டு விடுவார்கள் அல்லது மாற்றுவார்கள்.

முதலீட்டாளர்கள்

சுய தொழிலில் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். நீண்ட காலமாக தடைபட்ட பணவு வரவு இப்பொழுது வந்து சேரும். கடன் வாங்காமலேயே உபரி வருமானத்தில் தொழிலை விரிவு படுத்துவீர்கள். சிலர் தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய நேரும்.

தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். தொட்டது துலங்கும். வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்குவார்கள். ஆனால் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையால் சிலர் கடன் பெறலாம்.

அரசியல்வாதிகள்

புத்திக்கூர்மையுடன் செயல்பட வேண்டும். பேச்சாற்றலால் விரும்பியதை சாதிக்க முடியும். கட்சி மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. பிற்காலத்தில் அதுவே உங்களின் முன்னேற்றத்தை தடை செய்யும்.இரண்டாம் இடத்தில் நிற்கும் அஷ்டமாதிபதி சுக்கிரன் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து வம்பு வழக்கை விட்டு வாசலில் நிறுத்துவார்.

கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம். சந்தர்ப்பவாதியாக செயல்பட்டால் வீழ்ச்சியை சந்திப்பதில் சந்தேகம் இல்லை.உண்மையாக உழைப்பவர்கள் இந்த 2026 தேர்தலில் வெற்றிகரமான திருப்புமுனையை சந்திப்பீர்கள்.

கவனமாக செயல்பட வேண்டிய காலம்:

சனி + செவ்வாய் சேர்க்கை. மீன ராசிக்கு 2,9ம் அதிபதி செவ்வாயும் லா பாதிபதி மற்றும் விரயாதிபதியான சனியும் ராசியில் சேர்க்கை பெறுகிறார்கள்.இந்த கால கட்டத்தில் வாக்கில் நிதானம் தேவை. உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். அலைச்சல் மிகுதியாக இருக்கும்.

பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும். வரவு இல்லாமல் இருந்தால் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. லெளகீக நாட்டம் குறையும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையில் தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகமாகும்.

உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

பரிகாரம்

சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து ஆன்மீகப் பெரியோர்களின் நல்லா சியை பெறுவதால் நல்ல பலன் நடக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் திருச்செந்தூர் சென்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பிறகு முருகனை வழிபட்டு வர நிம்மதி கூடும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406