மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும் காலம். ராசிக்கு உச்ச குருவின் சமசப்தம பார்வை உள்ளது. தன்னம்பிக்கை, தைரியம், சிந்தனைத் திறன் அதிகரிக்கும். சமுதாய அந்தஸ்து உயரும். சமுதாய அந்தஸ்தான புதிய நண்பர்களின் நட்புகள் உருவாகும். சந்ததி விருத்தியாகும்.
புத்திர சோகம் அகலும். காதலுக்கு ஆதரவு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் சுப விசேஷம் நடக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை இழந்த ஆண், பெண்களுக்கு மறுமணம் நடக்கும்.
மருத்துவச் செலவுகள் குறையும். தொழிலில் மாற்றம் ஏற்படும். தொழிலிலுக்கு சகோதரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு தாய்மாமன் மூலம் தொழிலுக்கு உதவி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளால் அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும். பிரதோஷ நாளன்று கரும்புச்சாறு அபிஷேகம் செய்து சிவனை வழிபடவும்.