மகரம் - வார பலன்கள்

மகரம்- வார ராசிபலன் 9.8.2026 முதல் 15.8.2026 வரை

கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நனவாகும்.

மகரம்

திறமைகள் வெளிப்படும் வாரம். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனி பகவான் வக்கிரகதியில் பயணிக்கிறார். எனினும் ராசிக்கும் ராசி அதிபதிக்கும் குரு பார்வை இருப்பதால் தொட்டது துலங்கும். உங்கள் திறமைகள் அனைவராலும் போற்றப்படும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆழ்மன சிந்தனை பெருகும். தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து மகிழ்ச்சி நிலவும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நனவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். 13.8.2026 அன்று காலை 6.6 முதல் 15.8.2022 அன்று காலை 9.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பிரயா ணங்களை தவிர்க்கவும். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிடவும். ஆடி அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406