மகரம் - வார பலன்கள்

மகரம்- 2026 வார ராசிபலன் 8.11.2026 முதல் 14.11.2026 வரை

தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும்.

மகரம்

பொருளாதார மேன்மை கூடும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் குரு கேது சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார மேன்மையையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். சிந்தனை செயல் திறன் அதிகரிக்கும். தடைபட்ட அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். தந்தையின் அரசு வாரிசு வேலை கிடைக்கும். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். திருமணக் கனவு நனவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். கந்த சஷ்டி காலங்களில் குங்கும அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT