மகரம் - வார பலன்கள்

மகரம்- 2026 வார ராசிபலன் 4.10.2026 முதல் 10.10.2026 வரை

விஐபிக்கள் தொடர்பால் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

மகரம்

அனுகூலமான வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது. வாழ்க்கைத் துணை நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விஐபிக்கள் தொடர்பால் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். என்றோ, எப்போதோ வாங்கிப் போட்ட இடத்தில் இப்பொழுது கடன் பெற்று வீடு கட்டுவீர்கள். தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும். ஆனால் வேலைப் பளு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முக்கிய பணிகளை இந்த வாரம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம். 6.10.2026 இரவு 10.17 முதல் 9.10.2026 அதிகாலை 3.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். நண்பர்கள் கூட்டாளிகளிடம் கொடுக்கல், வாங்கலில் நிதானமாக செயல்படவும். சிலருக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். நோய், போட்டி பொறாமை பாதிப்பு, கண் திருஷ்டி தோஷம் போன்ற பாதிப்புகள் வரலாம். பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. மஹாளயஅமாவாசை அன்று பராமரிப்பு இல்லாத கோவிலுக்கு தேவையான மின் சாதனங்களை வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT