புது வசந்தம் பிறக்கும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் சீராகும். வீண் விரயங்கள் குறையும். அதிக முதலீடு செய்ய வேண்டிய புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு மறு திருமணம் நடக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களிடம் சிறுமன பேதம் ஏற்படலாம். ஜாமீன் பிரச்சினை, கடன் பிரச்சினை, நோய் தாக்கம், எதிரி தொல்லை, செய்வினைத் தாக்கம், பய உணர்வு போன்ற பாதிப்புகள் அகலும் நிரந்தரமில்லாத உத்தியோகம், அடிக்கடி வேலையை மாற்றுவது, தாய் மாமன், உடன் பிறப்புகளால் மன வேதனை, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற பிரச்சினைகள் விலகும். புண்ணிய சேத்திரங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் கூலித் தொழிலாளிகளின் தேவையறிந்து உதவவும்.