மகரம் வார ராசிபலன் 
மகரம் - வார பலன்கள்

மகரம்- வார ராசிபலன் 21.6.2026 முதல் 27.6.2026 வரை

புதிய முயற்சியில் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.

மகரம்

எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சுக்கிரனின் சமசப்தம பார்வை உள்ளது. தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த மகள், மகனுக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். ராகு, கேது மற்றும் குருவின் சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். புதிய முயற்சியில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்.தினமும் பட்சிகளுக்கு உணவிடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406