மகரம் - வார பலன்கள்

மகரம்- 2026 வார ராசிபலன் 18.10.2026 முதல் 24.10.2026

ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.

மகரம்

தடைகள் அகலும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. தந்தையின் கடன் மற்றும் பூர்வீக சொத்தால் நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. தந்தை, மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். பேஸ்புக் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய நட்பால் சில சங்கடங்கள் நேரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க நேரும். குழப்பமான மனநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும். சிலரின் திருமண வாழ்க்கை பஞ்சாயத்தில் நிறுத்தும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். பிள்ளைகள் தங்கள் சாதனைகளால் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். அம்மனுக்கு மஞ்சள் அபிசேகம் செய்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT